என் தங்க மாமா
எம். எஸ். எம். ஏ. கரீம்
மறைந்தும் மறையாத மாமனிதர்;
புல்லைக்கூட புண்படுத்தாதவர் எனப்
புகழப்பட்டவர்;
துரோகிகளின்
குரோதங்களை குழப்பங்களைக்கண்டு,
நாங்கள் குழம்பிப்போகையில்
அருமையான அறிவுரைகளால்,
நிதானான நிலைப்பாடுகளால்
எம்
வேதனைச் சுவாலைகளை
அணைத்தது விட்டவர்.
நினைக்கும் போதெல்லாம்
நெகிழ வைக்கும்
இனிய நினைவுகளை
விட்டுச் சென்றவர்;
மாமா!
உங்கள் புத்திமதிகள்
உங்களுக்கு மட்டுமே
சொந்தமானவை,
பல தசாப்தங்களுக்கு முந்திய
என் மண்டையோடு ஏற்றுக்கொண்ட
இன்று வரை வலிக்காத
உங்கள் குட்டுக்களை
இனியெங்கு காண்பது?
பண்பாட்டை
பழக்க வழக்கங்களை,
ஆங்கிலத்தை, அறிவுரைகளை
அள்ளித்தந்தீர்கள்.
அன்போடு கட்டியணைத்தீர்கள்.
கருணையையையும்
கண்டிப்பையும்
கலந்து தந்தீர்கள்.
அனாதையாகி
அலைந்த காலங்களில்,
அனாதை உணர்வை அகற்றி
விலக்கி வைத்தீர்கள்
இல்லாத இடைவெளிகளை
நிரப்பி வைத்தீர்கள்.
என்னைக் குழந்தையாகத்
தூக்கி வளர்த்த
உங்கள் முன்னால்;
கணவனாகி,
தந்தையாகிய பின்னும்
கால் மடித்து குழந்தை போல்
புத்திமதி கேட்ட நாட்கள்
மீண்டும் வராது.
என் தங்க மாமா
உங்கள் நினைவுகள்
கண்களைக் குளமாக்குகையில்
அல்லாஹ் உங்கள் மீது
அருட்களை
அள்ளிச் சொரிய வேண்டுமென
பிரார்த்தனைகளில்
கண்கள் நனைகின்றன.
(என் நினைவுகளை விட்டும் விலகாத என் அருமை மாமா எம். எஸ். எம். ஏ கரீம் நினைவாக)
No comments:
Post a Comment